இரண்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர்.
மேலும் இந்த விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.