நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு இக்கட்சியின் செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.
இக்குழு ஒருமாத காலமாக தமிழகத்தில் நிலவுகின்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.
மேலும் விவசாயிகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில் குறித்த அறிக்கை காணப்படுவதாக அக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு, ஆங்கிலம் – தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் இன்று கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.