கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் -19 முதல் -30 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனியுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, Airdrie – Cochrane – Olds – Sundre, City of Edmonton – St. Albert – Sherwood Park, Drayton Valley – Devon – Rimbey – Pigeon Lake, Drumheller – Three Hills, Fort Saskatchewan – Vegreville – Redwater – Smoky Lake, Hinton – Grande Cache, Jasper National Park, Leduc – Camrose – Wetaskiwin – Tofield, Nordegg – Forestry Trunk Road Highway 734, Red Deer – Ponoka – Innisfail – Stettler, Rocky Mountain House – Caroline, Spruce Grove – Morinville – Mayerthorpe – Evansburg ஆகிய பகுதிகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.