நாசாவின் விண்வௌி வீரர்களான Anne McClain கனடாவின் விண்வௌி முகவரகத்தின் David Saint-Jacques, ரஷ்யாவின் விண்வௌி வீரரரும், பயண கட்டளை தளபதியுமான Oleg Kononenko ஆகியோர் சர்வதேச விண்வௌி நிலையத்திற்கும் ட்ராகன் விண்வௌி ஓடத்திற்கும் இடையிலான தொடர்பை கிழக்கு நேர வலயத்தின் படி காலை 8.07 அளவில் திறந்து வைத்தனர்.
மிக நீண்ட பயணத்தின் பின்னர் சர்வதேச விண்வௌி நிலையத்தை அடைந்த ட்ராகன் குழுவினர் ‘Ripley,’ என்ற பரிசார்ந்த பெயர் ஒன்றையும் சூட்டினர். குறித்த விண்ணோடத்தினுள் மனிதன் தன்னை எவ்வாறு உணர்ந்து கொள்கிறான் என்பதை ஆராய்வதற்கான உணர் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
ஐந்து நாட்களுக்கு சர்வதேச விண்வௌி நிலையத்தில் தங்கியுள்ள Anne McClain மற்றும் Saint-Jacques ஆகியோர் ட்ரான்கன் விண்ணோடத்தின் செயற்பாடுகளையும், குறைபாடுகளையும் ஆய்வுக்கு உட்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வௌி வீரர்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த அமெரிக்காவின் விண்வௌி ஓடம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதை அடுத்து தனியார் நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு விண்வௌி ஓடங்களை தயாரிக்கும் பணிகளை சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பங்களிப்புடன் நாசா வழங்கியுள்ளது.
