மாவட்டத்தின்
ஒருங்கிணைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் அமைய ஜனாதிபதி செயலக அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இறுதி கட்ட
கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எண்ணத்தில் உருவான
“நாட்டுக்காக நாம் ஒன்றினைவோம்” கிராம எழுச்சி வேலைத் திட்டத்தின் கீழ் மாவாட்ட ரீதியாக கிராமங்கள் தெரிவு
செய்யப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
கிழக்கு மாகாணத்திற்கான கிராம அபிவிருத்தி நிகழ்ச்சி
திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
இனங்காணப்பட்ட கிராமங்கள் அபிவிருத்தி
செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம்
காணப்பட்ட கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த கிராமங்களின் அபிவிருத்தி செயல் திட்டங்களும் அதனுடன் இணைந்ததாக ஏப்ரல் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள துரித திட்டங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலக அதிகாரிகளால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அரச திணைக்கள அதிகளுடனான இறுதி கட்ட
கலந்துரையாடல் மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார்
தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்கு மாகாண எம் எல் எம்
.ஹிஸ்புல்லா , பாராளுமர உறுப்பினர்களான எஸ் . வியாலேந்திரன் ,எஸ் யோகேஷ்வரன் ,ஜனாதிபதி செயலக மாவட்ட இனைப்பாளர்
வைத்தியர் ஹோல்டன் பெர்னாண்டோ , ஜனாதிபதி
செயலக அதிகாரிகள் , அம்பாறை ,மட்டக்களப்பு ,திருகோணமலை மாவட்ட அரச திணைக்கள
அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் ,பாதுகாப்பு படையினர் கலந்துகொண்டனர்