அணுசக்தியில் இயங்கும் அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை, 3 பில்லியன் டொலருக்கு குத்தகைக்கு வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இவ்விடயம் குறித்து பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒப்பந்தத்துக்கு இந்தியா முழுமையாக இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அகுலா வகை நீர்மூழ்கிக் கப்பலை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் கையளிக்க வேண்டுமெனவும். இக்கப்பலில் மருத்துவ வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு பயன்படுத்த முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய கடற்படை ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறும் 3ஆவது கப்பல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.