இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பாக நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “குற்றவாளிகள் பற்றி பேசுவதற்கு நான் எந்தவொரு பொலிஸ் நிலையத்திற்கும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதில்லை.
மக்கள் நேய சேவையை வழங்கும் அதேநேரம் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கையை எடுத்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் மேற்கொள்வதற்கு பொலிஸ் சேவையில் உள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விஞ்ஞானபூர்வமாக தயாரிக்கப்பட்ட முறைமையொன்று அவசியம்.
இதற்காக நிபுணர்களின் உதவியை பெற்று உரிய முறைமையொன்றை தயாரிக்க வேண்டும். முன்னைய முறைப்பாடுகள் பற்றி ஆராய்ந்து குறுங்கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நிகழ்ச்சித்திட்டங்களின் அடிப்படையில் அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.
அபிவிருத்தியடைந்த நாடொன்றின் பண்பு பொலிஸ் நிலையம் அல்லது சிறைக்கூடங்களை அதிகரிப்பதன்றி குற்றங்களை தவிர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய சமூக மாற்றம் பற்றி கவனம் செலுத்துவதாகும்“ என குறிப்பிட்டுள்ளார்.
இங்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி பேசக்கூடிய பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்துள்ளார்.
அத்துடன், பொலித்தீன் தடையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட சுற்றாடல் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் பொலிஸ் திணைக்களத்தின் பங்களிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் குற்றங்களை ஒழிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களிலும் பொலிஸ் திணைக்களம் வழங்கும் ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
