LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

சர்வதேச நிறுவனங்களை திருப்திபடுத்தும் வரவு செலவுத்திட்டம் – அதுரலிய ரதன தேரர்

சர்வதேச நிறுவனங்களை திருப்திபடுத்தும் வகையிலேயே 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற வரவு திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எமது நாட்டினை நாமே உருவாக்கிக்கொள்ள வாய்ப்புகள் இருந்தும் அதனை கருத்தில் கொள்ளாது வெளிநாட்டு நலன்சார் வரவு செலவு திட்டத்தையே ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ளது.

இத்தனை காலமாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை நாம் விமர்சித்தோம். ஆனால் இந்த அரசாங்கமும் அதே பாதையில் தான் பயணித்து நாட்டினை நாசமாக்கிவிட்டது. எம்மால் மீள செலுத்த முடியாத அளவிற்கு கடன் பெறப்பட்டு விட்டது. கடன் சுமை 84 வீதமாக அதிகரித்துள்ளது.

தோட்டத்தொழிலாளர் பிரச்சினையை எடுத்துப்பார்த்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது. அவர்களின் லயன் வீடுகளை நீக்கிவிட்டு பாதுகாப்பான வீடுகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும்.

150 ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட தேயிலை செடிகள் தான் இன்றும் உள்ளது. அதனை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. இந்த அரசாங்கம் மிகவும் மோசமானது.

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே ஐக்கிய தேசிய கட்சி வரவு செலவு திட்டத்தை இப்பொழுது முன்வைத்துள்ளது.

இந்த ஆட்சியில் அனைத்துமே தனியார் மயப்படுத்தப்பட்டு விட்டது. இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து விட்டனர். தனியார் மயப்படுத்தல் என்பது ஐக்கிய தேசிய கட்சி மட்டும் அல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காலத்திலும் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் தான் தொழிற்சாலைகள் பல தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் எவருடனும் நாட்டினை முன்னெடுத்து கொண்டுசெல்ல முடியாது.

சிங்கபூர் தாய்லாந்து உடன்படிக்கை மூலமாக நாட்டினை விற்றுவிட்டனர். ஆகவே இந்த ஆட்சியையும் நிராகரித்து மாற்றி பயணம் ஒன்றினை நாம் உருவாக்க வேண்டியுள்ளது“ என குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7