
மேலும் கடந்த முறையை போலவே 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிக வரிச்சுமை காணப்படுவதாக அவர் கூறினார்.
அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.
இந்த வரவு செலவு திட்டத்தின் மூலமாக நாட்டினை முன்னெடுக்கவோ அல்லது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவோ முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த வரவு செலவு திட்டம் நாட்டினை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வேலைத்திட்டமாக அமைந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
நிதி அமைச்சரும் அரசாங்கமும் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வரிகளை கொண்டு ஆட்சியை நடத்தவே முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
