ஓசூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அவரது மனைவி ரத்தினம்மாவை சுயேச்சை வேட்பாளராக களம் இறக்கியுள்ளார். இவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கலின்போது, எம்.ஜி.ஆர் வேடத்தில் வீதியெங்கும் வருகை தந்துள்ளார்.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் எழுவப்பள்ளியைச் சேர்ந்தவர் சின்னையா (வயது-55) இவரது மனைவி ரத்தினம்மா (வயது-45). இவர்கள், கடந்த 1977ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் இவர், எம்.ஜி.ஆர். வேடம் அணிந்து அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் இவரை, ‘ஓசூர் எம்.ஜி.ஆர்’ என அ.தி.மு.க.வினர் அழைக்கின்றனர்.
இதேபோன்று கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக கிராமம் தோறும் எம்.ஜி.ஆர். வேடத்தில் சென்று பிரசாரம் செய்தமை குறிப்பிடத்தக்கது.