
மேலும், இந்த அமைப்புகளின் சொத்துக்களும் முடக்கப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், லஷ்கர் ஏ தொய்பா மற்றும் மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 68 தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் தேசிய தீவிரவாத எதிர்ப்பு ஆணையத்தின் கண்காணிப்பு பட்டியலில் உள்ளன.
கடந்த மாதம் 14ஆம் திகதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகின்றது.
இதனைத் தொடர்ந்து தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
தீவிரவாத அமைப்புகள் மீதும், அதன் தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த காலங்களிலும் இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் குறிப்பிட்டளவு காலம் மட்டுமே தடை விதித்தது. அந்தவகையில், கடந்த 2018ஆம் ஆண்டில் இதேபோன்ற உத்தரவை அந்நாட்டு ஜனாதிபதி பிறப்பித்தார். ஆனால் அது 6 மாதங்களில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
