இவ்விவகாரம் குறித்து தாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் எதையும் உறுதி செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொள்கைகளின் அடிப்படையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை வெளிப்படையாக கூறக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதனை பாகிஸ்தான் மறுத்துவந்த நிலையில் விமானத்தின் வரிசை எண் மற்றும் குறியீட்டு எண் என்பவற்றைக் கொண்டு இந்தியா இதனை உறுதிசெய்துள்ளது.
குறித்த விமானங்களை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டும் பயன்படுத்த வேண்டுமே தவிர ஏனைய நாடுகள் மீதான தாக்குதலில் பயன்படுத்தக்கூடாது என்ற அமெரிக்காவின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளதாக இந்தியா குற்றம்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.