LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 9, 2019

கனோலா உற்பத்திகளின் இறக்குமதியை நிறுத்தியது சீனா!

ஆரோக்கியமான எண்ணெய் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் பிரதான தவார வகைகளில் ஒன்றாக கனோலா உற்பத்திகளை, கனடாவிடமிருந்து இறக்குமதி செய்வதனை சீன அரசாங்கம் நிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக கனடாவின் வின்னிபெக்கிலிருந்து, சீனாவிற்கு பெருந்தொகையான கனோலா உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கனோலா தொகுதியில் தீங்கு ஏற்படுத்தக்கூடிய பூச்சிகளில் இருந்தான கிருமித்தொற்று காணப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கனடாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கனோலா உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுத்துள்ள சீன அதிகாரிகள், சீன மக்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிகவும் முதன்மையானது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடுமையான இராஜதந்திர முறுகல் நிலைமை நீடித்து வரும் நிலையில் இந்த விடயம் மேலும் பிரச்சினைகளை அதிகரித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7