இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனியர்கள் முற்றுகையிட்டிருந்த சமயத்தில் அபு செய்ட் என அடையாளம் காணப்பட்ட குறித்த சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் 6 ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
அண்மைய காலமாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு நாள் இரவும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலஸ்தீனிய எல்லையில் கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
1948 இல் இன ரீதியாக பாலஸ்தீனியர்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் தமது நிலங்களுக்குள் வர அனுமதி கோரி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய எல்லையில் பாலஸ்தீனியர்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.