சென்னை அறிவாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்து தெரிவித்த அவர், 21 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மக்களவை தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட வேண்டும். இதனை தடுப்பதற்கான முயற்சியில் மத்திய மாநில அரசுகள் ஈடுப்பட்டுவருகின்றன.இதனை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
தி.மு.க கூட்டணியில் மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த நாளை காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
அத்துடன் மக்களவை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.