உலக ஓட்டிசம் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு
இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
ஒட்டிசம் எனப்படும் மூளைவிருத்தி நிலை கோளாறுகளால்
பதிப்பப்பட்டுள்ள சிறுவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உதவதற்கான பயிற்சி நெறிகளை கத்தோலிக்க
திருச்சபையின் அன்புபனி சகோதர்களினால் மட்டக்களப்பு
தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகின்றது
இதற்கு அமைய மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச
செயலாளர் பிரிவுகளில் இயங்குகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வுகள் நடாத்தப்பட்டு
வருகின்றன
இதன்கீழ் மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக
பபிரிவுகுற்பட்ட காத்தான்குடி பகுதியில்
இயங்குகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு
செயலமர்வு மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தில் இன்று
நடைபெற்றது
மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி
நிலையத்தின் அதிபர் அருட்சகோதரர் மைக்கல் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வளவாலர்களாக
தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் உளநல
மருத்துவ சேவை ஆலோசகரும் .வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஜூடி ஜெயகுமார் , தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் அருட்சகோதரர் ஸ்டீபன் மெதிவு
மற்றும் செயலமர்வில் காத்தான்குடி பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள்
கலந்துகொண்டனர்