ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன ஆகிய கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்காவிட்டால் இரு தரப்பிற்குமே வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவேட்பாளர் தெரிவு தொடர்பாக மஹிந்த அணிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன தலைமையில் கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக இரு தரப்பிற்கும் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக நேற்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற மஹிந்த அணியின் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை விதித்திருந்தார்.
இந்தநிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.