அமெரிக்க – தென்கொரிய நாடுகளின் பாதுகாப்பு படைகளது கூட்டுப்பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வொப்பந்தம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அமெரிக்க- தென்கொரிய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்தாகாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்ததையடுத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவ்வொப்பந்தத்தின் மூலம் தென்கொரிய படைகளது தரம் உயர்த்தப்படவுள்ளது. எனினும் இப்புதிய ஒப்பந்தம் தென்கொரியாவின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் கடந்த காலத்தை போலல்லாது இவ்வொப்பந்தம் ஒரு வருடத்தில் காலாவதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 28,500 அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 1950-53 கொரியப் போருக்குப் பின்னர் அமெரிக்கா அதன் இராணுவ இருப்பை பராமரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.