யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, சுதந்திர கட்சியுடனோ பயணித்து தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெறமுடியாது. அண்மையில் ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சியின் போது அதனைத் தோற்கடிக்க நாம் கூட்டமைப்போடு இணைந்து செயற்பட்டோம்.
ஆனால் இன்று மஹிந்தவின் திருடர்களையும் அவர்களின் திருட்டு செயல்களையும் ரணிலும், மைத்திரியும் இணைந்து பாதுகாக்கின்றனர்.
அதனால் ஒரு பொது வெளிக்கு நாட்டை கொண்டு செல்ல வேண்டியது அவசியம். தற்போதைய வரவு செலவு திட்டத்தில் வடக்கை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எந்தவித நிதியையும் ஒதுக்கவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.