LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 30, 2019

இஸ்லாமியர்களுக்கு உரித்தான காணிகள் அபகரிக்கப்படுகின்றன – ரிஷாட் குற்றச்சாட்டு

இஸ்லாமியர்களுக்கு உரித்தான காணிகளை வனவளத்துக்கு சொந்தமாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் விமர்சனங்களுக்கும் ஏளனங்களுக்கும் அஞ்சி  சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் தாம் இருக்க போவதில்லை என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஷாபி நகரையும் மஜீத் நகரையும் இணைக்கும் வேதத்தீவு பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசியலமைப்பில் சொல்லப்பட்ட அனைத்து உரிமைகளும் எல்லா சமூகத்துக்கும் பொதுவானதே. அந்த வகையில் மத உரிமை, வாழ்வுரிமை, சட்ட ரீதியான உரிமை எல்லோருக்கும் சமத்துவமானதாகும்.

பெரும்பான்மை தலைவர்கள் செய்த தவறான காரியங்களும் அவர்களின் பிழையான அணுகுமுறைகளுமே தமிழ் இளஞர்களை ஆயுதம் எடுக்க செய்தது. நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இன்னொரு சமூகத்தையும் சீண்டுகின்றனர், குறிவைத்து தாக்குகிறார்கள். இஸ்லாமியர்களின் உள்ளங்களை உடைக்கிறார்கள்.

எமது சமூகத்தை இல்லாதொழிக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுகின்றனர். புல்மோட்டை தொடக்கம் பொத்துவில்வரை எமது சமூகத்துக்கு உரித்தான காணிகளை வன வளத்துக்கு சொந்தமாக்கியுள்ளார்கள்.

காலப்போக்கில் இங்கிருக்கும் காணிகளையும் அபகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நாங்கள் அடங்கி போனால் எதுவும் நடக்கலாம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வாறான விடயங்களில் இருந்து சமூகத்தை பாதுகாக்க தூர நோக்குடன் செயற்படுகிறது” என்று தெரிவித்தார்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7