வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்திலும், துரை செந்தில் குமார் இயக்கத்தில் பெயரிடாத படத்திலும் தனுஷ் தற்போது நடித்து வருகின்றார்.
இந்நிலையில் ‘அசுரன்’ படத்தில் 45 வயதையுடைய தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் தனுஷ் இரு வேடங்களில் நடிப்பதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த படங்களின் படப்பிடிப்பு நடவடிக்கைகள், ஒரே நேரத்தில் இடம்பெற்று வருகின்றமையால் 4 கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தனுஷ் எவ்வேளையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.