அழித்தல் கடவுளான சிவனின் திருமணத்தை கொண்டாடும் இந்து பக்தர்கள் வட இந்திய பிரயாக்ராஜ் நகரில் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 8 வாரங்களாக இடம்பெற்ற கும்பமேளா சமய நிகழ்வுகள் முடிவுக்கு வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் உறவுகளுக்கும், எதிர்கால ஈடேற்றத்திற்கும் இறைவனை வேண்டி பிராத்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று பெரும் கங்கைகள் ஒன்றிணையும் இடத்தில் நீராடுவதை இந்து பக்தர்கள் பெரும் புண்ணிய காரியமாகவும் தங்களின் பாவங்களை போக்கும் ஸ்தானமாகவும் கருதுகின்றனர்.
இந்தமுறை கும்பமேளாவில் வௌிநாட்டு விருந்தினர்கள் உட்பட மில்லியன் கணக்காக உள்நாட்டு பக்தர்களும் கலந்து கொண்டனர்.
பல வௌிநாட்டு பக்தர்கள் இந்தியாவின் பாரம்பரிய பெருமை மிக்க கலாசாரத்தையும், வழக்கங்களையும் கடைபிடிப்பதில் மிகுந்த ஆர்வத்தை கொண்டிருந்மை இங்கு காணக்கூடியதாக இருந்தது.
சுமார் 2000 வருடங்கள் பழைமையான இந்த பாரம்பரிய சமய நிகழ்வுகள் மூன்று ஆறுகளையும், நான்கு நகரங்களையும் மையமாக கொண்டு இடம்பெற்று வருகின்றது.
