அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்ரா நதி பகுதியில் சுமார் 61 கி.மீ. தொலைவிற்கு இந்த மின்னணு கண்காணிப்பு வசதி செய்யப்படவுள்ளது.
இந்த திட்டத்தின்படி எல்லை பகுதிகள் கண்காணிப்பு கேமராக்கள், லேசர் கதிர்வீச்சு மூலம் கண்காணிக்கப்படவுள்ளன. இவை பி.எஸ்.எப். எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட உள்ளன.
இதன்மூலம் எல்லைப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே கண்காணிக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் கடினமான நிலப்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் வீரர்கள் பணியாற்றும் நிலை தவிர்க்கப்படுகின்றது.
அந்தவகையில், இது போன்ற மின்னணு கண்காணிப்பு வசதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா – பாக் எல்லையில், இரண்டு இடங்களில் தலா, 5 கி.மீ. தொலைவுக்கு சோதனை முறையில் ஏற்படுத்தப்பட்டது.
ஆறுகள், பாலைவனம் மற்றும் புவியியல் அமைப்புகளால் சில இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்க முடிவதில்லை. இது போன்ற பகுதிகளில் மின்னணு கண்காணிப்பு வசதி செய்வதற்கு திட்டமிடப்பட்டது.
இவற்றின் ஊடாக பங்களாதேஷத்தில் இருந்து அகதிகள் நுழைவதை தடுக்கவும், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்துவதை தடுக்கவும், சர்வதேச எல்லையில் இவ்வாறான தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.