3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 10ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இவரது துவிச்சக்கர வண்டிப் பயணம், 25ஆவது நாளாக தொடர்கின்றது. இதில் இலங்கை முழுவதும் பல இடங்களுக்குச் சென்ற பிரதாபன், வவுனியாவுடன் தனது பயணத்தை நிறைவுசெய்யவுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும், லயன் அறைகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிவீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனிப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனியொரு நபராக மேற்கொண்ட தர்மலிங்கம் பிரதாபனின் சாதனைப் பயணத்தை ஆதவன் நியூஸ் பாராட்டி வாழ்த்துகின்றது.