களுத்துறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான சிறிகொத்த – கிராமத்திற்கு என்ற வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியன இணைந்து தேசிய ஜனநாயக கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளோம்.
இந்த கூட்டமைப்பின் ஊடாக, சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி, நல்லிணக்கம், சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை என்பன பாதுகாக்கப்படும்” என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.