இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஆட்சியாளர்களை நம்பி வாக்களித்த மக்களை அரசாங்கம் இருட்டில் தள்ளிவிட்டனர்.
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை சீனாவுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
ஏற்கனவே இதனை கைவிட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ள நிலையிலும், இவ்வாறு சீனாவுக்கு கொடுத்தால் இலங்கைக்கு 90 பில்லியன் நஷ்டமாகும் என கூறியும் அதனை கருத்தில் கொள்ளாது சீனாவுக்கு வழங்க விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.