சென்னை, கோயம்பேட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரேமலதா விஜயகாந்த் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“மக்களவை தேர்தல் நிலைப்பாடு குறித்து எதிர்வரும் நாட்களில் தே.மு.தி.க உத்தியோகபூர்வமாக அறிவிக்கும். மேலும் எமது கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்ததொரு குழப்பமும் இல்லை. நாம் தெளிவாகவே உள்ளோம்.
தே.மு.தி.க.வினர் துரைமுருகனை சந்திக்கும் போது வராத தி.மு.க.வினர் ஊடகங்களில் இவ்விடயம் குறித்து அறிவித்த பின்னர் எவ்வாறு வருகை தந்தனர்?
அந்தவகையில் சாதாரண விடயத்தினையும் கூட தி.மு.க பெரிதாக்கி தே.மு.தி.க.வை பழிவாங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.
தி.மு.க என்றாலே தில்லு முல்லு கட்சி என்பதை அனைவரும் அறிவார்கள்” என பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.