இத்திட்டத்தின்கீழ் பூரணப்படுத்தப்பட்ட வீதிகளைத் திறந்து வைத்து புதிய வீதிகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப், சம்மேளன தலைவர் எம்.ஐ.ஆதம்லெப்பை பலாஹி, ஜம்இய்யதுல் உலமா தலைவர் எம்.ஐ.அப்துல் கையூம் ஷர்கி கட்சியின் நகர சபை உறுப்பினர் ஏ.எம்.மாஹீர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.