நெருப்பில் பொன் புடமிடப்படுகின்றது| ஏற்புடைய மனிதர் மானக்கேடு எனும் உலையில் சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.”
இறைமகன் இயேசுவும் தமது திருப்பாடுகளின் வாயிலாக புடமிடப்படுகின்றார்| அதனாலே உயர்வடைகின்றார்!
இரண்டாம் நிலை
இயேசுவின் தோள் மீது சிலுவை சுமத்தப்படுகின்றது .. ..
திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகின்றோம்.
அது ஏதென்றால் உம்முடைய திருச்சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர் சுவாமி.
“பாவியானவன் தீமையைக் கருத்தரிக்கின்றான்; தீவினையைக் கருவாகக் கொண்டிருக்கின்றான், வஞ்சகத்தைப் பெற்றெடுக்கின்றான்.
“குழியைப் பறிக்கிறான், அதை ஆழமாக்குகிறான்;;;, தான் பறித்த குழியில் தானே விழுகிறான்.
“அவன் செய்யும் தீமை அவன் தலைமேலேயே வந்து விடும். அவன் செய்த கொடுமை அவன் மேலேயே படும்.”
(சங் 7: 14, 15)
உலகத்தைச் சுமக்கும் தோளுக்குச் சிலுவை ஒரு பாரமா? ஆனாலும் இயேசுவுக்கு அது பாரமாக இருக்கிறது.
கொடியை மீறிக் காய்கள் பெருத்துவிட்டால், கொடியே நழுவிச் சரிவதில்லையா? உலகின் பாரத்தைவிட அதன் பாவங்கள் கனமானவை. எனவேதான் சிலுவை கனக்கிறது.
அவமானச் சின்னம் அதைத் தோளில் ஏற்றி, அனந்தக் களிநடனம் புரியும் அரக்கர் கூட்டம், எப்படி அது தன்மானச் சின்னமாக – வெற்றியின் சின்னமாக மாறி விட்டது என்பதை உணர்ந்து கொள்ளப்போகிறது?
பாமரர் கூட்டமல்ல அது பரத்தையர் கூட்டம்! ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சொன்னதைச் செய்யும் கூட்டம். காசைக் கண்டால் கடவுளையே விற்கத் தயங்காத கூட்டம். அதன் நடுவே இயேசு.
தலையிலே முள்முடி, உடலெல்லாம் கசையடி.
அவரை அழிக்க எண்ணியோர் வெட்டுகின்ற குழி, தமது கால் வரை சரிந்து விட்டதை இன்னும் புரிந்து கொள்ளவேயில்லை.
சிந்திப்போம்:
என் வாழ்வில் எதிர்ப்பட்ட பொறுப்புக்களை – சுமைகளை – பொறுமையோடு ஏற்றுச் சுமக்க மனவலிமையைத் தந்த இறiவா உமக்கு நன்றி!
தன்மானம் பெரிதென எண்ணி, காற்றடிக்கும் திசையெலலாம் கருத்துமாறி, செயல்மாறித் திரியாது, நேர்மையாய் வாழும் மனப் பக்குவத்தைத் தந்த இறiவா உமக்கு நன்றி!
மற்றவர் அழிவு கண்டு மகிழ்கின்ற மனம் எனக்கில்லை இறiவா, உமக்கு என் நன்றி!
என் சுமையை மற்றவர் மீது போட்டுவிட விரும்பாத உணர்வை எனக்களித்தமைக்கும் நன்றி இறiவா!
எங்கள் பேரிற் தயவாயிரும் சுவாமி,
எங்கள் பேரிற் தயவாயிரும்!
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள் சருவேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவன – ஆமென்!
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்