பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்டதாலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது.
இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையுடன் 2 மகன்களும், அதேநேரம் அவர்களைக் காப்பாற்ற முற்பட்ட மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரம்பதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து 6 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.