கஞ்சா போதைப்பொருள் கனடாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத விற்பனைகளை தடுக்க பொலிஸார் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் எட்மன்டனிலுள்ள மருந்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோத கஞ்சா போதைப்பொருள் மற்றும் அதனால் கிடைக்கப்பெற்ற வருமானம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கனடாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.