கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சண்ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஸ் கார்த்திக் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.
இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய சண்ரைசஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் வோர்னர் 85 ஓட்டங்களையும், தமிழக வீரர் விஜய் சங்கர் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 182 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் ரசல் அதிகபட்சமாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.