கனேடிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இறப்பு அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இறப்பு வீதக் கணக்கெடுப்பின் புதிய அறிக்கைக்கு இணங்க, கடந்த 2018ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 94 சதவீதமானவர்கள் விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விபத்துக்களுக்கு அதிகரித்த போதைப்பொருள் பாவனையே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தற்போது போதைப்பொருட்களின் பாவனைகள் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை காணப்படுவது கவலையளிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.