
'ஞானத்தின் கருவூலங்களில் அறிவார்ந்த பொன் மொழிகள் உண்டு| பாவிகளுக்க இறைப்பற்று அருவருப்பைத் தரும். ஞானத்தை நீ அடைய விரும்பினால், கட்டளைகளைக் கடைப்பிடி. அப்போது ஆண்டவரே உனக்கு ஞானத்தை வாரி வழங்குவார்.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானமும் நற்பயிற்சியுமாகும்| பற்றுறுதியும் பணிவும் அவருக்கு மகிழ்ச்சி தரும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தைப் புறக்கணியாதே| பிளவுபட்ட உள்ளத்தோடு அவரிடம் செல்லாதே.
மனிதர் முன் வெளி வேடம் போடவேண்டாம்| நாவடக்கம் கொள். நீ வீழ்ச்சியுறாதவாறு செருக்கு கொள்ளாதிரு| உன் மீதே மானக் கேட்டை வருவித்துக் கொள்ளாதே. ஆண்டவருக்கு அஞ்சி நடக்காமலும், மனதில் கள்ளம் கொண்டிருந்தாலும் ஆண்டவர் உன் மறைவான எண்ணங்களை வெளிப்படுத்துவார். அனைவர் முன்னிலையிலும் உன்னைத் தாழ்த்துவார்.'
ஞானம் மனதில் இருக்கின்றபோது அதுவே நமது பாதையைச் செப்பனிட்டு நம்மை வழி நடத்தும். செருக்கு நமது நாவின் கட்டுக்களை அவிழ்த்து விட நம் பேச்சால் நம்மை இழிவுபடுத்தும் நிலையை நாம் உருவாக்கிக் கொள்ளுவோம்.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
