ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுடன் மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
ஏற்கனவே சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கு, வை.எஸ்.ஆர். கட்சி கடும் போட்டியில் உள்ளது. இந்நிலையில் பவன் கல்யாண், இடதுசாரிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் சேர்ந்துள்ளதால் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கு தலைநகரம் உருவாக்குவதில் தாமதம், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுக் கொடுக்காதது, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், வை.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வலுத்துவருகிறது. அத்துடன் பவன் கல்யாண் தலைமையில் கட்சிகள் ஒன்று திரள்வது சந்திரபாபு நாயுடுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள். இதனால், சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்குகளும், வெற்றியும் கணிக்க முடியாத அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.