1999-ம் ஆண்டு முதல் அல்ஜீரிய ஜனாதிபதியாக இருக்கும் 82 வயதானஅப்துலசீஸ் போடேபிளிகாக் உடல் நலம் குன்றிய நிலையில், அவரே 5-வது முறையாக மீண்டும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
அல்ஜீரியா 100 ஆண்டுகளுக்கும் மேல் பிரான்ஸ் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரான்ஸில் சுமார் 17 லட்சம் அல்ஜீரியர்கள் வசிக்கின்றனர்.
இவர்களில் ஆயிரக்கணக்கானோர் பாரிசில் திரண்டு அப்துலாசிஸ் மீண்டும் ஜனாதிபதியாகக் கூடாது எனக் கோரி போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி பாடியபடி முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலையிட போராட்டக்காரர்கள் சிலர் வலியுறுத்தியபோது, அல்ஜீரியா விவகாரத்
தில் தலையிட விரும்பவில்லை என அவர் மறுத்துவிட்டார்.