5.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
தவாவ் நகரிலிருந்து வடகிழக்கில் 211 கிமீ தொலைவில், கடலுக்கடியில் 60 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகாக பதிவாகியிருந்ததாகவும் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.
எனினும் சில நிமிடங்களிலேயே 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என திருத்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியிலுள்ள கட்டடங்கள் சில வினாடிகள் குலுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.