கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து சிரிய இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே சிரியாவில் மோதல் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் மேற்குலக நாடுகளின் உதவியுடன் சிரிய அரசாங்கம் போரை இறுதி கட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது.
யுத்தம் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் ஐ எஸ் அமைப்பினர் சிரியாவின் பாக்ஹுஸ் பகுதியினை மாத்திரம் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் போராளிகள் அங்கிருந்து தப்பி செல்வதாக கடந்த வாரங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தப்பியோட முயன்ற 400 போராளிகளை சிறைப்பிடித்திருப்பதாக சிரியா தெரிவித்துள்ளது. இதேவேளை 100 போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.