நூர் ஆயிசியா எனும் 3 வயது குழந்தை பெப்ரவரி மாத இறுதியில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரின் விசாரணைகளின் பின்னர் குழந்தை கொல்லப்பட்டமை தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நூரின் உடல்பாகங்களை நேற்று (புதன்கிழமை) பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதை தொடர்ந்து நடந்த விசாரணைகளில் குழந்தை இறக்க முன்பதாக மலேசிய தம்பதியரிடத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து குறித்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் மண்டை ஓடு லங்காவி மலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வரப்படுவதாகவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.