கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஜிகாடிகளால் மேற்கொள்ளப்பட்ட இரு பதில் தாக்குதலில் 27 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக சிரியாவின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இராணுவத்தினரது தாக்குதலில் 5 ஜிகாடிகள் கொல்லப்பட்டதாகவும் மேலும் லடாகியா பகுதியில் ஹயாத் தாகிர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இங்கிலாந்து கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களிடம் இருந்து சிரியாவை மீட்கும் போராட்டம் இறுதி கட்டத்தை அடைந்துள்ள போதும் இன்னும் ஒரு சில பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன. இந்நிலையில் அப் பகுதிகளை மீட்க இராணுவத்தினர் போராடி வருகின்றனர்.
இட்லிப் பகுதியில் ஹமா மற்றும் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் ஹயாத் தாகிர் அல்-ஷாம் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் உள்ளன. ஹயாத் தாகிர் அல்-ஷாம் அமைப்பு அல் கொய்தாவின் கிளை இயக்கமாக முன்பு செயல்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
