எத்தியோப்பியாவில் விமானம் ஒன்று நேற்று விபத்துள்ளாகியதில் கனேடியர்கள், பிரித்தானியர்கள் உட்பட 35 நாடுகளை சேர்ந்த 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அண்டோனிஸ் மாவ்ரோபோலாஸ் எனும் நபர், அந்த விமானத்தில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்திருந்ததாகவும் 2 நிமிடங்கள் தாமதாக வந்ததால் அவருக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அந்த நபர், தாமதமாக வந்ததால் தன்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனவும் இதனால் விமானத்தில் பயணிக்காமல், அதிர்ஷ்டவசமாக தான் மட்டும் உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.