ஐக்கிய தேசிய கட்சியின் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்த போது இந்த மூன்று வருடங்களில் தான் அரசியலுக்கு அர்த்தத்தையும், சமூகத்திற்கு சேவை செய்யக் கூடிய பதவியையும் அமைச்சர் றிசாட் பதியூதீன் பெற்றுத் தந்துள்ளார் என துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அலுவலக பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமத்தில் அமையப்பெற்றுள்ள மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தின் மிக நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-
பாராளுமன்றத்தில் சட்டங்கள் அமுலாக்கப்படுகின்ற போது ஏனைய தலைவர்கள் மௌணித்து இருக்கின்ற போது உரிமைக்காக பாடுபாகின்ற தலைமைத்துவம் என்றால் அது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரையே சாரும்.
நான் ஐக்கிய தேசிய கட்சியின் 28 வருடங்கள் எனது அரசியல் காலத்தை வீணடித்த போது இந்த மூன்று வருடங்களில் தான் அரசியலுக்கு அர்த்தத்தையும், சமூகத்திற்கு சேவை செய்யக் கூடிய பதவியையும் எமது தலைவர் அமைச்சர் றிசாட் பதியூதீன் பெற்றுத் தந்;தார்.
இன்று எமது சமூகத்திற்கு சேவை செய்யக் கூடிய வாழ்வாதாரம், புனர்வாழ்வு, விவசாயப் பிரச்சனை, இளைஞர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், வடக்கு கிழக்கிலுள்ள துறைமுகத்தை அபிவிருத்தி செய்யக் கூடிய வகையிலும், தேசிய வருமானத்தையும், இளைஞர்களின் உணர்வுகளையும் நிவர்த்தி செய்கின்றதான அமைச்சை எனக்கு பெற்றுத் தந்துள்ளனர் என்றார்.