சுரங்கப்பாதை போக்குவரத்த வலையமைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரொறன்ரோ மாகாணம் இதுவரை கண்டிராத வகையில் போக்குவரத்து அமைப்புகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.
அந்தவகையில், மிகப் பெரிய உட்கட்டமைப்பு போக்குவரத்து திட்டத்தில் பலபில்லியன் டொலர்களை செலவிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நகரத்தின் நான்கு பாரிய போக்குவரத்து திட்டங்களை வடிவமைப்பது குறித்த அறிவிப்பை மாகாண அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது