மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் இருந்து மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு ஏராளமானோர் சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில், கவுதமாலாவில் இருந்து லொரியில் 80க்கும் மேற்பட்டோர் மெக்சிகோவுக்கு பயணம் செய்துக்கொண்டிருந்த போது மெக்சிகோவின் சியாபாஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லொரி, சாலையோர பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.