இருப்பினும் விமானம் கீழே விழுவதற்கு முன்னதாக விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியுள்ளார்.
இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து மிக் 21-ல் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
1963 முதல் 2015 வரை மிக் 21 ரக போர் விமானம் 210 விபத்துக்களில் சிக்கியதாக பாரத் ரக்சக் என்ற பாதுகாப்புப் படை குறித்த தகவல்களைப் பதிவிடும் தளம் தெரிவித்துள்ளது.
2012-ம் ஆண்டு வெளியான தகவல் படி, மனித தவறு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மிக் 21-ல், 171 விமானிகள், பொதுமக்களில் 39 பேர், பிறர் 8 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.