அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது.
இதன்காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவான விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் ஒன்ராறியோவில் நேற்று(செவ்வாய்கிழமை) 20 சென்றி மீற்றர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இன்றைய தினமும் கனடாவின் பல பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.