ஒட்டாவாவின் டயஸ் சாலை 900 தொகுதி பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் தொடர்பாக தகவலறிந்த பொது மக்கள் உடனடியாக 613-236-1222 ext. 2666 or Crime Stoppers at 1-800-222-8477 (TIPS) என்ற இலக்கத்திற்கு எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.