அளுபோமுல்லவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள்.
அதனூடாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்குக் காணப்பட்ட உரிமையையும் பறித்துக்கொண்டார்கள். நாடாளுமன்றத்தில் தவறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு அமைவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்“ என தெரிவித்துள்ளார்.