இந்நிலையில், ஈரானில் 12 மாகாணங்களுக்கு நாளை (புதன்கிழமை) வரை உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈரானில் கடும் மழை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு உட்துறை அமைச்சு மக்களை எச்சரித்துள்ளது.
சுமார் 15 நிமிடங்கள் பெய்த கன மழை காரணமாக ஈரானின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டவுடனே மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறியிருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தெஹ்ரான் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தினூடான விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.