மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் செபஸ்ரியன் றோத்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.
இடாய் சூறாவளியினால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பலர் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொஸம்பிக்கின் துறைமுக நகரான பெய்ராவை இடாய் சூறாவளி கடந்த 14ஆம் திகதி தாக்கியது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் நாடு பேரழிவை எதிர்நோக்கியது.
அதனை தொடர்ந்து இடாய் சிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளையும் தாக்கியிருந்தது. இவ்வாறாக மூன்று நாடுகளிலும் பேரழிவை ஏற்படுத்திய இடாய் சூறாவளியினால் சுமார் 686 பேர் உயிரிழந்தனர்.
மூன்று நாடுகளில் மொஸம்பிக் குடியரசே கடும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது. பல்லாயிரக் கணக்கான வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.